Author Topic: மீண்டும் காதல் செய்ய ஆசை  (Read 859 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.



காதல் அர்த்தம் காணாதவரை
காதலை பற்றி ஒரு தேடல்
காதலை கண்டவுடன்
காதலில் ஒரு ஊடல்...
காதல் தொலைந்து போனபின்
காதல் மீது ஒரு சாடல்...

காதலே வேண்டாம் என
மனதில் ஒரு  துறவறம்...
உண்மை காதல் எதுவென மனதில்
ஒரு குழப்பம்
சொல்லும் காதல் எல்லாம் உண்மைதானா
மனதில் ஒரு நடுக்கும்...
இத்தனை குழப்ப , நடுக்கத்திற்கு
நடுவே
மீண்டும் காதல் செய்ய ஆசை..
உண்மை காதலை உணர ஆசை..

செல்லமான கொஞ்சல் பேச்சும்
சிறு சிறு சண்டைகளும்
காணமல் தவிக்கும் துடிப்பும்
கண்டும் காணமல் ஒரு நடிப்பும்
மீண்டும் காதல் செய்ய ஆசை...

உச்சிதனை முகர்ந்து நீ தரும்
முத்தமும்..
கனிவான உன் கை கூடலும்...
கண்ணால் பேசும் மொழிகளும்
மீண்டும் அனுபவிக்க ஆசை
மீண்டும் காதல் செய்ய ஆசை...

தோற்றும் போகும் மனதை
தேற்ற நீ இருக்க
தோற்று தோற்று
உன்னில் என்னை தேற்றிக்கொள்ள
ஆசை..
மீண்டும் காதல் செய்ய ஆசை...
« Last Edit: April 05, 2012, 07:04:37 AM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

Re: மீண்டும் காதல் செய்ய ஆசை
« Reply #1 on: April 05, 2012, 10:33:23 PM »
Quote
மீண்டும் காதல் செய்ய ஆசை..
உண்மை காதலை உணர ஆசை..



மரண காயம் வரும் ... பரவாஜில்லைனா பண்ணிக்க
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: மீண்டும் காதல் செய்ய ஆசை
« Reply #2 on: April 05, 2012, 11:28:26 PM »
Quote
மீண்டும் காதல் செய்ய ஆசை..
உண்மை காதலை உணர ஆசை..



மரண காயம் வரும் ... பரவாஜில்லைனா பண்ணிக்க



Maranithapin Kaayathin engadi theriya poguthu :D loochu


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: மீண்டும் காதல் செய்ய ஆசை
« Reply #3 on: April 06, 2012, 05:23:22 AM »
மரண  வலிக்கு நிகரான வலி நேரலாம் என சொல்லி இருக்கணும்!
எது எப்படியோ,முட்டாள்  - லூச்சு நல்ல இணை
மீண்டும் காதல் புரிய(உணர) வாழ்த்துக்கள் !
உண்மை காதலை உண்மையாய் புரிய (உணர) வாழ்த்துக்கள் !
« Last Edit: April 06, 2012, 11:35:38 AM by aasaiajiith »

Offline Jawa

Re: மீண்டும் காதல் செய்ய ஆசை
« Reply #4 on: April 06, 2012, 07:34:04 AM »



தோற்றும் போகும் மனதை
தேற்ற நீ இருக்க
தோற்று தோற்று
உன்னில் என்னை தேற்றிக்கொள்ள
ஆசை..
மீண்டும் காதல் செய்ய ஆசை...


indha varigal enaku poruthamanathaga irukum...... nice line shruthi(F)....... :) :) :) :)