Author Topic: நானும் நானாக  (Read 1198 times)

Online TiNu

நானும் நானாக
« on: August 11, 2020, 09:28:02 PM »
நானும் நானாக
**********************

எனை அறியாமல் என்னுள் குடிபுகுந்த
உனை என்ன செய்வது?....

என் ஐம்புலன்களையும் ஆட்கொள்ளும்
உன் நினைவுகளால் நான் படும் பாட்டை கேளாயோ...

கண் திறந்த நிலையில் கனவுகள் காண்கிறேன்
கண் மூடிய நிலையில் வாய் திறந்து பேசுகிறேன்

உனை நினைக்கும் வேளையில் என் பருவம் மறந்து
நானும் சிறு பிள்ளை என உன் மடிதனில் தவழ்கிறேன்...

சற்றே நிலை மாறி உன் தாயென நானும் உருமாறி
உன் உச்சு தலை முகர்ந்து கன்னத்தில் முத்தமிடுகிறேன்

எனை அறியாமல் என்னுள் குடிபுகுந்த
உனை என்ன செய்வது?....

என் உணர்ச்சிகளை கொப்பளிக்க வைக்கும் உன் நினைவுகளை
உன்னுடனே எடுத்து கொள்ளடா..... நானும் நானாக மாற.....


Offline fcp.shan

Re: நானும் நானாக
« Reply #1 on: August 13, 2020, 09:06:14 AM »
Super tinu  8)
Vazhthukkal

Offline MaSha

Re: நானும் நானாக
« Reply #2 on: August 28, 2020, 11:36:22 PM »
:D nice tinu

Offline Ninja

Re: நானும் நானாக
« Reply #3 on: August 29, 2020, 03:22:47 PM »
lovely. Nice Tinu sis 👏

Offline Jack Sparrow

Re: நானும் நானாக
« Reply #4 on: August 30, 2020, 10:25:57 AM »
Arumai ., Arumai., Tinu Chellzz :) :)