கவிஞ்ஞனின்
சிந்தனையில்
சிதறவிட்ட சின்னஞ்சிறு
ஹைக்கூ கவிதை போல
உன் புன்னகை
முன்காலை பொழுதில்
பூக்களின் மேல்
படிந்திருக்கும்
பனித்துளி போல
உன் மூக்குத்தி
நியூட்டனின் விதியை
சற்றும் பிறழாமல்
கற்று தரும்
உன் பாதம் நோக்கி படர்ந்திருக்கும்
உன் கூந்தல்
கேட்க கேட்க
என் மனதை
கும்மாளமிட
வைக்கும்
உன் கொலுசொலி
பேதை என
என்னை ஆகிய
போதை தரும்
உன் இதழ்கள்
கவர்த்திழுப்பதில்
காந்தத்தை
நாண செய்யும்
உன் கண்கள்
கொட்டி தீர்க்க
அன்பையெல்லாம்
சேமித்து வைத்திருக்கும்
உன் இதயம்
வேண்டுமடி
நீ எனக்கு
****Joker***