கடைசி சந்திப்பின்
கடைசி நொடி...
பிரிதல் முடிவான பின்
பெருக்கெடுத்து ஓடிய
உணர்வுகளின் கொந்தளிப்பை
சுனாமியை விட
எதிர்கொள்ள
கடுமையான தருணம்
பிரிந்த பின்
வறண்ட என் மனதில்
உன் நினைவுகள் தரும்
கண்ணீர்
பரிசாய்
நனைத்து கொண்டிருக்கிறது
ஆழ்ந்த நினைவுகளில்
கலந்திட்ட உன்னை
ரகசியமாய் பொக்கிஷம் போல
பாதுகாத்துக்கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளை என்னுள் இருந்து
கவர்ந்திட முடியாதபடி
இருந்தும்
வீசப்பட்ட
ஒற்றை செருப்பாய்
கிடக்கிறது
என் வாழ்க்கை