சித்தன் அவன் சித்தம்
முழுவதும் பிரமித்து
வணங்குவது இயற்கையை
பற்றற்று இருப்பவனும்
பற்று கொள்வான்
இயற்கையை காண்கையில்
அழகான நிலா
தன் முகத்தை காண
எத்தனிக்கிறதோ
நீர்விழுச்சியில்
இல்லை
நிலவின் அழகுதான்
நீர்வீழ்ச்சி போல்
என்னுள் பிரவாகம்
எடுத்து ஓடுகிறதோ
அருகில் சென்றால்
பேரிரைச்சலோடு
வரவேற்கும் நீர்வீழ்ச்சி
பேரொளியோடு
நிலவையும்
பிரதிபலிக்கையில்
கவிதையால்
சொல்ல
வார்த்தைகள்
இன்றி
கம்பனும்
திக்கி திணறி
போவான் எனில்
நான் மட்டும்
எம்மாத்திரம்
இயற்கையை ரசிப்போம் , காப்போம்