Author Topic: இரண்டெழுத்து கதாநாயகி நீ  (Read 1163 times)

Offline thamilan

நீ யார்
என்ன பெயர்
எந்த ஊர்
என்ன கலர்
கட்டையா நெட்டையா
எதுமே தெரியாது

 
என்றாலும் எனது
இனிய நண்பி நீ


இரண்டு எழுத்துடன்
உலா வரும்
குறும்புக்காரி நீ

FTC அரட்டை அரங்கத்தில்
உன்பெயர் இருக்கும் - ஆனால் -
அமைதியின் சிகரம் நீ

பொருக்கி எடுத்து
பொறுக்கிகளை களைந்து
ஒருசிலருடன் பேசுபவள் நீ

முகமூடி போட்ட முகம்
உனக்குப் பிடிக்கும்
அடிக்கடி கண்களை உருட்டுபவள் நீ

அமைதியான நீ
பேசத்தொடங்கினால்
பிரவாகம் எடுக்கும் நதி நீ

காதல் மன்னர்கள்
காதல் கணைகள் தொடுத்தாலும்
ஊதி தள்ளி விட்டு
ஒன்றும் தெரியாதது போலிருப்பவள் நீ
கடலை மன்னர்கள்
எவ்வளவு தான் வறுத்தாலும்
கருகிப்போகாதவள் நீ

எனக்கு ஒரு நல்ல நண்பி நீ