Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 234  (Read 3018 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 234
இந்த களத்தின்இந்த  நிழல் படம்   FTC Team சார்பாக        வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline thamilan

எங்கு இல்லை
எதில் இல்லை இசை
ஓம் என்ற ஓங்கார இசையில்
உழல்வது தானே  உலகம்

மரக்கிளை அசைவில்
மணிகளின் ஒலியில்
பறவைகள் சத்தத்தில்
அலைகளின் உரசலில்
எங்கும் நிறைந்துள்ளாய் நீயே இசையே

என் காதலியின் பேச்சு நீ
துடிக்கும் இதயத்தின் துடிப்பு நீ
என் கனவுகளுடன்
கடற்கரையில் நடக்கும் போது
தென்றலாக ஒலிப்பவள் நீ
உன் இ என்ற எழுத்தில்
இவ்வையகம் அடங்கும்

மனதை தாலாட்டும் தென்றல் நீ
கண்களை மூடினால்
நரம்புகளை சுண்டி இழுக்கும்
காந்தம்  நீ
காதலை பலவிதங்களில்
சொல்லித்தந்தவள் நீ
எரிமலையாய்  கொதிக்கும் மனதையும்
பனிமலையாய் குளிர்விப்பவள் நீ 

கண்கள் அறியா காட்சி
நாசி நுகரா நறுமணம்
இதழ் அறியா சுவை
செவிக்கு மட்டும் வரம் நீ

எனக்கு
வான் மழையில் நனைவதும்
பிடிக்கும்
இசை மழையில் நனைவதும் பிடிக்கும்
மழையில் நனையும் போது
குடை பிடிப்பதும் பிடிக்காது
இசையில் நனையும் போது
காதுகளுக்கு கவசம் அணிவதும் பிடிக்காது
« Last Edit: June 07, 2020, 03:19:48 PM by thamilan »

Offline Ninja

பிறந்து வளர்ந்த பொழுது
ஆராரோ  பாடி  அரவணைத்த இசையே
எதுவரை  என்னுடன்  பயணிக்க போகிறாய்?
தன்னிலை மறந்து தவிக்கும்பொழுது
தந்தையாய்  என்னை ஆற்றுகிறாய்
துயில் கொள்ள முடியாமல் புரளும்பொழுது
தாய் மடியாய் அரவணைக்கிறாய்
துவண்டு தனியே நிற்கும்பொழுது
நண்பனாய் தோள் கொடுக்கிறாய்
தனிமையான பல பொழுதுகளில்
தோழியாய் துணை நிற்கிறாய்
வார்த்தைகள் தோற்றுப்போகும்போது
கடவுளாய் நீயே நிறைகிறாய்


காலை தீண்டிடும்  அலையோசையில்   நீ
உணர்வுகளை தீண்டும்  வயலினில்  நீ
இதமாக வருடும்  காற்றில்   நீ
காற்றை கொண்டே வெளிவரும்
புல்லாங்குழல்  ஓசையிலும்   நீ
கூவும் குயிலின் குரலில்  நீ
மனதை கரையவைக்கும்   இசையே
மதியும் மயங்க வைக்கிறாய்
நேசத்தை பரப்புகிறாய்
கோவத்தையும்  குறைக்கிறாய்
தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் நீயே தானோ?


செவிக்கு  விருந்தாகும் இசையே
நீயே பிணிக்கும் மருந்தாகிறாய்
இதயத்தின் வலிக்கு துணையாகும் இசையே
சிலரின் வாழ்விற்கும்  ஒளியாகிறாய்
துன்பத்திலும் இன்பத்திலும்
மனதை நனைக்கும் மழையாய் வரும் இசையே
உனக்கு மட்டும் நான் குடை பிடிப்பதில்லை
« Last Edit: June 08, 2020, 07:34:04 AM by Ninja »

Offline Hari

என் உயிர் இசையே ....

உன்னை  நினைக்கும்  போதுதான்  புரிகிறது 
உன்மீது நான் கொண்ட  காதலின்  ஆழம்
சுகமானது என்பேனா?   உயிரானது என்பேனா?
எதுவாயினும்   திகட்டாதது  என்பதே  உண்மை ...

அதிகாலை  சிட்டுக்குருவிகளின் வீணை வாசிப்பில் ..
 மூங்கில் மரங்களின் அசைவில் உருவாகும் புல்லாங்குழல் ஓசையில்..
அம்மா  என்று கதறும் பசுக்  கன்றுகளின்  ஒலியில்
என்னை கண்விழிக்க   வைக்கும் இசையே..

என் மனஅழுத்தத்தை  உன்  கட்டுக்குள் வைத்து
வேடிக்கை  பார்க்கும்   வசியக்காரியே..
திக்கெட்டும்   தேன்  சொட்டும்  என் இசையரசியே  .
உன்னை ரசித்து ரசித்து நான் மெய்மறந்து போகிறேன்
....
உன் இசை மழையில் நான் குடை பிடிக்க....
ஜில்லென வீசும் உன் சாரல் காற்று 
என் இதய நாடி நரம்புகளை சுண்டி இழுக்க ..
உன்மீது உருவான பெரும் காதல் வெள்ளத்தில்
தினம் தினம்  நான் மூழ்கி தத்தளிக்கிறேன்...

காற்று நுழைந்து தேங்கும் இடமெல்லாம்
 உன்  சிரிப்பொலியின்  எதிரொலி  ..
என் செவிகளில் நீ நுழையும் போதெல்லாம்
என்னை அடிமையாக்கி  அரவணைக்கிறாய் ...

 சிறுபிள்ளையில் நான்  கதறி அழும்போது
 கட்டி அரவணைத்து \ என் தாய்  பாடிய தாலாட்டு நீ'.
நான் கவலையில் இருக்கும்போது தோள்  கொடுத்த  தோழி நீ
 மகிழ்ச்சியாக இருக்கும்போது என்னை முயல்குட்டி போல்
 துள்ளி குதித்து ஆட செய்தவளும் நீ ..
 
பசுமை நிறைந்த என் கிராமத்து சாலைகளில் 
இரவுநேரங்களில் பூச்சிகள் தாளமிட...
தன்வாயால் கெடும் தவளை கூட்டங்கள் ராகமிட
சில்வண்டுகள்  காற்றோடு கலந்து  இசைப்பாட்டு   பாட  ...
உன் இனிய   காதலில்   நான் மயங்கித்தான் போகிறேன்
   .
உன் காதலை விவரிக்க  வார்த்தைகள்  தேடுகிறேன்
வார்த்தைகள்  இல்லாத  பொக்கிஷம்  நீ
என்னுள்  சுவாசமாய்   நிறைந்தவள்  நீ
என்றும்   என் காதலி  நீதானடி
« Last Edit: June 08, 2020, 09:18:15 PM by Hari »

Offline SweeTie

கொட்டுகிறது  ஸ்வரங்களின்  மழை
ரணமான   என் இதயத்தை 
குணமாக்க  வந்த  இசை
குரல்கள்  மாறி மாறி ஒலிக்கின்றன   
என் காதுகள்  கூர்மையாகின்றன
அதில்  என்னவளின் குரல் எங்கே 
தேடுகிறேன்   அந்த  காந்தக் குரலை

என் கைகள் குளிரில் நடுங்குகிறதா
குரல்களின்  அதிர்வில்   நடுங்குகிறதா
கை நழுவும்  என்   குடையை   
இறுக்கமாய் பிடித்துக்கொள்கிறேன்   

அன்பே நீ  அங்கே  நான் இங்கே  வாழ்ந்தால்
இன்பம் காண்பதும்  எங்கே  !
அய்யகோ    அது என்னவளின் குரல் அல்லவா
அன்று அவள் பாடிய  பாடல் அல்லவா
எப்படி என்னால் மறக்க முடியும்

ஆயிரம் மைல்களுக்கு அப்பால்  வாழ்ந்த
அவளும்  நானும்   சந்தித்த வேளை
கண்கள்  நான்கும்   மூடிக்கொண்ட  தருணம்
உயிரும் உடலும்  ஒண்டற  கலந்த நேரம்
நினைத்தாலே  இனிக்கிறதே 

அவள்  முணுமுணுத்து  பாடுகிறாள் 
அவள்  காதோரம்  லோலாக்கு   
என் தோள் மேல் அசைபோட ... பாடுகிறாள்
அன்பே  நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால்
இன்பம் காண்பதும் எங்கே..

.கை கோர்த்து   கடல்  மணலில்
நடந்த   தடம் காயவில்லை
சிற்றலையை  துரத்தும்
பேரலையும்  ஓயவில்லை 
கால் நனைக்க சென்ற  என்
கண்மணியை   கொன்றுவிட்டாய்
என்னவளை கொடுத்துவிடு
கொடுத்துவிடு  ....கொடுத்துவிடு...

புரண்டு புரண்டு  அழுகிறேன் 
என்னை  தேற்றுவார்  யாருமில்லை
சொர்க்கத்தில்  குடி புகுந்தாள் என்னவள் 
என்னை நினைத்து  பாடுகிறாள்.




 

Offline Raju

கடந்துவிட்ட
என் கனவுகள்..
காத்திருந்த
சில நினைவுகள்..
கலங்கித் தவித்த உணர்வுகள்
இமயம் தாண்டி
இறக்கை விரிக்கும்
கற்பனைகள் யாவிலும்...

அவளாகி நானாகி
நானாகி அவளாகி
நாமகி நமக்காகி
நம்மோடு பயணித்த தென்றல் நீ  ..

உன்னோடு என்பந்தம்
உயிரோடு கலந்தோய்ந்த
ஜீவித பந்தம்..

பிறந்ததுமுதல்
பின்னோடு , என்னோடு
பயணித்த உன்னிடம்
ஓர் விண்ணப்பம்....

பின் இரவின் முடிவிலும்
இமைகள்
ஒன்றோடு ஒன்று
ஒட்ட மறுக்கிறது
உன்னால்....

கொஞ்சம்
எனை நனைக்காதே
கொஞ்சும் கிளி
கூட இல்லை
அவள்
முந்தானையில்
தலை துவட்ட..

அவள்
தூங்கியிருக்கலாம்
தூரமாய் இருக்கலாம்
தூங்க முடியாது
எனைப்போல்
தனித்து தவித்திருக்கலாம்...

அவளற்ற இந்த இரவில்
எனை நனைத்து
நீ இன்பம் கொள்ளாதே..

கொஞ்சம் எட்டியிரு
இனியாவது
என் கண்ணுறங்கவேண்டும்...

மழையே .... இசை மழையே...
« Last Edit: June 10, 2020, 11:48:13 PM by Raju »

Offline MoGiNi

யாரோடும் ஒத்துவராது
ஓர் நடைவழிப் பாதையில்
பயணிக்கிறது அவன் கால்கள்...

இழுத்து மூடப்பட்ட
இருதய கதவுகளின்
நிஷப்தங்களை
இதோ நாம்
தகர்ந்துவிடுவோமென
இறக்கை கட்டிக் கிளம்புகிற
இசைப்பறவை....

எங்கிருந்தோ
செவிகளை தீண்டும்
தென்றெலன இசைக் காற்று...
தினமும் எண்ணக்குவியலில்
திக்குத் தெரியாமல் கலந்து
சிந்தையில் ஏறாமலே
திசைமாறுகிறது...

சொல்லமுடியாமலும்
மெல்லமுடியாமலும்
கடக்கும்
இரவுக் கரங்களில்
இசையென அவனுள்
அவள்
உள்நுளைந்துவிட கூடாதென
இருதய கதவுகளை
எண்ணச் சுவர்
இறுக்கிப் பிடிக்கிறது...

காலங்களை
கண்ணீரால்
அவன் கடந்துவிட
நினைக்கவில்லை
காலத்தோடு
காணாமல் போக
கடுகளவேனும்
அவள் நினைவின்றி
தொலைக்க வேண்டும்...

எனவே..
இன்னிசை மழையே
அவனை நனைக்காதிரு  ..
அவளோடு முடியாது
தொடரட்டும்
அவன் பயணம்....
« Last Edit: June 11, 2020, 12:12:01 AM by MoGiNi »

Offline TiNu

நானும் போகிறேன்... உனை  விட்டு...
என் வெறுமையை குடையாக்கி..
உன்னை பாராது... போகிறேன்

என் ஜனனம் முதல் என்னுடன்
கைகோர்த்த இசையே...
உனை வெறுக்கின்றேன்..

பண்பட்ட ஓசையே.,.. 
நீ கட்டிப்போட்டது ..
ஜீவராசிகள் மட்டுமல்ல...

அடைப்பட்ட கதவுகள் திறந்தாய்...
திறந்த கதவுகளை தாழிட்டாய்..
அசையா கற்களை அசைத்தாய்...

வெப்பம் உண்டாக்கி விளக்கேற்றினாய்..
மழை பொழிய செய்தாய்...
ஓடும் தண்ணீரை கட்டுப்படுத்தினாய்...

என் தனிமையில் துணை நின்றாய்..
என்னுள் நீ நுழைந்து, மாற்றங்கள் செய்தாய்..
ஆனாலும் வெறுக்கிறேன்...

சிறகு இல்லா பறவைக்கு
பறக்க ஆசை வந்தது....
உன் இசையால்...

கால்களில்லா மயிலுக்கு
ஆட ஆசை வந்தது....
உன் இசையால்...

இசையே விலகி நில்.. எண்ணங்களே வேறு..
யதார்த்தம் வேறு... என்றுணர்ந்தேன்... இன்று..
இசையே....விலகி நில்..

அண்டவெளியின் நிசப்தத்தை உடைத்த ஓசையே.
ஆதி சிவனின் மூலமே...
உன்னுள் அடங்கும் அகிலமே...

ஆனாலும்... போகிறேன்... வெகுதூரம்..
என் வெறுமையை குடையாக்கி..
உன் குரல் கேளாது.... போகிறேன்
ஓசையில்லா உலகம் தேடி..

Offline JeGaTisH

மெல்லிய  ஒலி யாக
காதுக்குள்  நுழைந்தவள் 
என் மனதை கவர்ந்த
காதலி  இவள் இசையோ!

காற்றில் கலந்து வந்து என்
மூச்சாகி   நின்றவள்   
மழை யில் நனைந்த என்னை
துவட்டும்  துகிலாக   தந்தவள் 

அவள் மீட்டும் இசையில்  நான்
மதி  மயங்கி    போவதனால் 
கேட்கும்   இசை  எதிலும்
அவள்   உருவம் காண்கின்றேன்

தூங்காத    இரவுகளில்
எனக்கு துணையாக வந்து 
துயில் பாடி தூங்க
வைத்தவளும் நீதானோ !

ஆளில்லா  கப்பலிலே 
ஆழ்ந்த உறக்கத்திலும்
கேட்குதடி  உந்தன் இசை
அள்ளி  எடுத்து அரவணைத்து
ஆசை முத்தமிடுவேனோ உன்னை 

கொஞ்சிடும் சிறு சிட்டுக்குருவி
மொழி  அறிவேன் 
இவள் கொஞ்சும் மொழி
அறியாமல் அழுகிறது
அனுதினமும் என் விழிகள்  !



            தனிமையே மிக சிறந்த நண்பன் ....அன்புடன் ஜெகதீஷ்
« Last Edit: June 12, 2020, 05:08:10 PM by JeGaTisH »