அருமையான கருத்து ஜாவா !
இந்த பதிப்பை படித்து முடிக்கும் போது
என் எண்ணத்தின் பிம்பம் உன்னுள்
பதிந்ததாய் சிறு எண்ணம் என்னுள் சில நிமிடம் !
அரசின் ஆளுமை திறனை அப்பட்டமாய்
அதேசமயம் ஆணித்தரமாய் ,(இக்காலத்தில்)
சுட்டி காட்டவும், கெட்டிக்காரத்தனம் வேண்டும்..
எனக்கு உன் வரிகள் பெருமை. அருமை,அருமை!
சமுதாய சிந்தனையை வெளிபடுத்தும் பதிப்பில்
கொஞ்சம் கூடுதலாய் தேவை,பொறுமை,பொறுமை
என் நினைவினில் நிழலாய் நிழலாடிகொண்டிருக்கும்
ஒரு சிறு நிகழ்வை(கருத்தை)பகிர்ந்து கொள்ளலாமா ?
நீ, மேற்குறிப்பிட்ட பல அரும் நறும் திட்டங்கள் ,
அக்கால ஆட்சியின் திட்டம், எனும் ஒற்றை
காரணத்திற்காக மட்டும், திட்டம் தீட்டப்பட்டு
கட்டம் கட்டி ,கை(கழுவ) விட படுவதை போல்
செயல்படுத்தாமல் செல்லாது என்பதை போல்,
அந்த ஆட்சியின் போது நடத்திவைக்கப்பட்ட
திருமணங்கள் ஏதும் செல்லாது என
சொன்னாலும் சொல்வாரோ ?
ஆட்சரிய பட இல்லை !
ஒருவேளை ,அப்படி ஒரு சட்டதிருத்தம்
தீர்மானமாய் நிறைவேற்றபட்டால் கூட
சந்தோஷமாய் ஏற்றுகொள்வார்கள்
ஏனெனில்
மாற்றத்தை ஏற்காவிட்டால்
மடையர்களாகிடுவாரே !