Author Topic: உன்னால் முடியும்  (Read 1037 times)

Offline thamilan

உன்னால் முடியும்
« on: May 09, 2020, 10:23:43 PM »
நண்பனே
எட்டு திக்கும்
உன் வருகைக்காக காத்திருக்க
ஏன் ஏதுமற்றவன் போல
மூலையில் முடங்கி கிடக்கிறாய்
வெடிக்காதவரை
யாரும் அறிவதில்லை
எரிமலையின் சீற்றம்
அது போல
நீ முயலாதவரை
உன் வாழ்வில் இல்லை ஏற்றம்

முடியாது என்ற
உன்முகத்திரையை கிழித்து
நெஞ்சத்தில் முடியும் என்ற
முத்திரையை குத்திக்கொள்
உன்னால் முடியாதது
இவ்வுலகில் எதுவும் இல்லை

வாழ்க்கை பந்தயத்தில்
ஓடுபவன் நீ
பின்னே வருபவனை கண்டு
பெருமிதம் கொள்ளாதே
உனக்கு முன்னே
ஓடுபவனை முந்த முயற்சி செய்

வெற்றியை நோக்கி நீ
பயணிக்கும் போது
வேகத்தடைகள் ஆயிரம் இருக்கும்   
வேகத்தடைகளில் உன்
வேகத்தை  வேண்டுமானால்  குறைத்துக்கொள்
ஒரு போதும்
உன் மோகத்தை குறைத்துக் கொள்ளாதே