Author Topic: மனசாட்சியை தொலைத்தவர்கள்  (Read 1130 times)

Offline thamilan

 
கவலை கொள்ளாதே தோழனே
மனசாட்சி தொலைத்திட்ட
மாந்தர்கள் பலர் வாழும்
இந்த  சமுதாயத்தை நினைத்து….

ஆயிரம் நிறைகள்
உன்னிடம் இருந்தாலும்
உன் சிறுகுறை தேடி
ஆராயும்
ஆராட்சியாளர்களே இங்கு அதிகம்

நிறை சொல்லி போற்றும்
நெஞ்சங்களை விட
குறை சொல்லி தூற்றும்
நெஞ்சங்களே இங்கு அதிகம்

ஒரு படி நீ உயர்ந்தால்
உன்னை அண்ணாந்து பார்க்க
விருப்பமின்றி
உன் ஆணி வேரினை
ஆட்டம் காணச் செய்ய
திட்டங்கள் தீட்டுவதில்
திறன் படைத்தவர்களே இங்கு அதிகம்

துன்பத்தில் நீ கிடந்தால்
உன்னை கண்டு
துடிக்கும் மனிதர்களை விட
நடிக்கும் மனிதர்களே அதிகம்

ஆதலால்
கவலை கொள்ளாதே தோழனே
மனசாட்சியை தொலைத்த
மாந்தர்கள் வாழும் நாடு இது   
« Last Edit: May 09, 2020, 07:52:10 PM by thamilan »