Author Topic: நம் தமிழகத்தின் நிலைமை  (Read 4925 times)

Offline Jawa

தற்போதைய அரசியல், DONT MISS TO READ IT AND FORWARD IT TO  ALL
 இரண்டு நண்பர்கள் தற்போதைய அரசியல் தமிழகத்தை பற்றிய உரையாடல்.
நண்பர்1: நண்பா நலமா?
நண்பர்2: நலம், நீ நலமா?
நண்பர்1:  நான் நலம். உன் வேலை எல்லாம் எப்படி போய்  கொண்டிருக்கிறது?
நண்பர்2:ஏதோ பரவாயில்லை. (சலிப்போடு)
நண்பர்1: ஏன் இப்படி சலித்து கொள்கிறாய்?
நண்பர்2: பிறகு நான் என்ன செய்வது, M.Sc, படித்து விட்டு வெறும் 4000 ரூபாய் தான் சம்பாதிக்கிறேன். நீ தான் எனக்கு ஏதாவது idea சொல்ல வேண்டும்.
நண்பர்1: முதலில் உன்னுடைய வேலையை ராஜினாமா செய்.
நண்பர்2:  வேலைய ராஜினாமா செய்து விட்டு சோத்துக்கும் செலவுக்கும் என்ன செய்வது?
நண்பர்1: அதற்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேள். நீ M.Sc, படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தால் தமிழக அரசு உனக்கு மாதந்தோறும் 7000 முதல் 10000 வரை இனாமாக தரும்.
நண்பர்2: அப்படியா! சந்தோசம் தான், ஆனால் நான் வீட்டில் இருக்க எனக்கு பொழுது போகதே நான் என்ன செய்வது?
நண்பர்1: அதுக்கு தான் தமிழக அரசு இலவச கலர் டிவி கொடுத்துருக்கே அதை பார்த்து பொழுதை களி
நண்பர்2: சரி, சாப்பாட்டுக்கு என்ன செய்வது?
நண்பர்1: அதுக்கும் வழி இருக்கிறது நம் தமிழக அரசு இலவசமாக அரிசி வழங்க போகிறது அதை வைத்து சமைத்து சாப்பிடு
நண்பர்2: ஓ சரி தான் அப்படினா பருப்பு வாங்குறதுக்கு பாதி அரிசியை வித்து அந்த காசுல பருப்பு வாங்க வேண்டியது தான். சரி சமைக்கிறதுக்கு எனக்கு காஸ் இல்லியே?
நண்பர்1:  கவலை படாதே உனக்கு இலவசமாக காஸ் கொடுப்பாங்க, மிக்சி, கிரைண்டர் எல்லாம் கொடுப்பாங்க.
நண்பர்2: எல்லாம் சரிதான் என்னுடைய குடிசை வீட்டில் இதெல்லாம் வைக்கிறதுக்கு எடம் இல்லையே?
நண்பர்1: அதுக்கு தான் அரசாங்கம் உனக்கு கான்க்ரீட் வீடு கட்டி தருகிறதே
நண்பர்2: எல்லாம் சரிதான், நான் மட்டும் தனியாக எப்படி இருக்க முடியும்?
நண்பர்1: அப்படியென்றால் கல்யாணம் பண்ணிக்கோ
நண்பர்2: என்ன விளையாடுறியா? கல்யாணம் பண்றதுக்கு குறஞ்சது 20000 இருந்தால் தான் கோவில்ல வச்சாவது தாலி கட்ட முடியும்.
நண்பர்1: நீ ஏன் கவலை படுற, அதுக்கு தான் அரசாங்கமே இலவச திருமணம் செய்து வைக்குது, அப்புறம் பொண்ணுக்கு 20000-25000 வரை பணம் கொடுக்கிறாங்களே.
நண்பர்2: அப்படியா சூப்பர் பா, சரி கல்யாணம் ஆனா எனக்கு குழந்தை பிறக்குமே பிரசவ செலவுக்கு என்ன பண்றது?
நண்பர்1: அதுக்கு தான் தமிழக அரசு மாதந்தோறும் கர்ப்பிணி பெண்களுக்கு ரூபாய் 500 வழங்குகிறார்களே. அது மட்டுமல்ல பிரசவம் நமது அரசு மருத்துவமனையில் செய்து கொள்ளலாம். ஏதாவது பெரிய ஆபரேஷன் என்றாலும் காப்பீட்டு திட்டம் என்று ஒன்று இருக்கிறது அதை வைத்து நீ உன் குடும்பத்தை நோயில் இருந்து காப்பாத்தி கொள்ளலாம்.
நண்பர்2: அப்படியென்றால் என் மனைவிக்கு கிடைக்கும் ஊக்க தொகையும் எனக்குரியதும் சேர்த்தால் மாதம் குறைந்தது 10000-12000 வரை கிடைக்கும் இல்லையா?
நண்பர்1: சரியாக சொன்னாய், சரி அந்த பணத்தை வைத்து என்ன செய்ய போகிறாய்?
நண்பர்2: நான் மாத மாதம் சிறிது சிறிதாக சேர்த்து என் குழந்தையை ஒரு இங்கிலீஷ் கான்வென்டில் சேர்த்து படிக்க வைப்பேன்.
நண்பர்1: அதற்கு தான் அரசு பள்ளி இருக்கிறதே பா
நண்பர்2: அரசு பள்ளியில் இங்கிலீஷ் சொல்லி தர மாட்டார்கள். அதிலும் அவன் கான்வென்டில் படித்தால் நாளைக்கு அமெரிக்கா வுக்கு போய் வேலை பார்ப்பான்.
நண்பர்1: ஏன் அவனை இங்கயே வேலைக்கு அனுப்ப வேண்டியது தானே?
நண்பர்2: இல்லை, எப்படியும் அவன் பெரிய scientist ஆவான் அவனுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் தான் சரியானவை.
நண்பர்1: அது சரி தான் அரசாங்கம் உனக்கு இவ்வளவு செய்தால் நீ இப்படி தான் செய்வாய். அதே அரசாங்கம் தொழில் துடங்கும் இளைங்கர்களுக்கு ஊக்க பணம் தந்தாள் நம் தமிழகம் எப்பொழுதோ முன்னேறியிருக்கும்,
நண்பர்2: இது எல்லாம் யோசிச்சு தான் நன் அவனை வெளி நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன். ஏன் என்றால் எப்படியும் நம் தமிழ்நாடு சோம்பெரியாகிவிடும் இங்கு இருந்து என்ன புண்ணியம்.
 
 
பார்த்தீர்களா நம் தமிழகத்தின் நிலைமை, சிந்தயுங்கள்.....!

Offline Yousuf

Re: நம் தமிழகத்தின் நிலைமை
« Reply #1 on: April 04, 2012, 06:00:15 PM »
ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும். குறிப்பாக இலவசதிர்க்கு ஆசை படும் தன்மானம் அற்ற தமிழன் சிந்திக்க வேண்டும்.

சிந்திப்பார்களா??????

எகிப்து புரட்சி தமிழகத்தை எட்டியாவது பார்க்குமா????

நல்ல பதிவு ஜாவா மச்சி!

தொடரட்டும் உங்கள் பதிவுகள்!