Author Topic: காத்திருப்பேன்  (Read 829 times)

Offline Jawa

காத்திருப்பேன்
« on: April 01, 2012, 06:51:13 PM »
சிந்திக்க ஆரம்பித்தேன்
சித்தம் கலங்கியதே
சிரம் சுடுகிறதே
சித்திரம் கலைகிறதே
சித்தாந்தம் மாறுதே
சிலம்பாடுதே வாதம்
சிலையும் கலையும்
சிரிப்பும் கவலையும்
சிற்றின்ப வேட்கையும்
சிறுமையும் வெறுமையும்
சிலிர்க்காத மனிதமும்
சிறக்காத சிற்றுண்டியும்
சிலவும் பலவும்
சிறிதும் நினையாமலே
சிந்தித்த பின்னாலே
சிக்கான நூலானதே
சின்னாபின்னமானதே
சிறு தூக்க சுகமும்
சிவந்தன கண்ணும்
சிறைப்பட்ட மனமும்
சில்லென்ற பனியில்
சிங்கார கற்பனையில்
சிக்காத சுரமொன்று
சிந்தனை தருமென்று
சிறுமிக்கு தெரியாதோ
சிப்பிக்குள் முத்தாய்
சிறப்பாய் உருவாக
சிறு யுகம் காத்திருப்பேன்

Offline Global Angel

Re: காத்திருப்பேன்
« Reply #1 on: April 01, 2012, 07:24:01 PM »
சி வரிசையில் சிறப்பான கவிதை ஜாவா ... ஆமா யாருக்காக காத்திருப்பு
                    

Offline Jawa

Re: காத்திருப்பேன்
« Reply #2 on: April 01, 2012, 07:53:19 PM »
Angel athu elam secret solla matene....

Offline Yousuf

Re: காத்திருப்பேன்
« Reply #3 on: April 01, 2012, 07:59:07 PM »
நல்ல கவிதை ஜாவா மச்சி!

ஒரே எழுத்தில் தொடராக ஒரு கவிதையை எழுத தனித்திறமை வேண்டும்!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: காத்திருப்பேன்
« Reply #4 on: April 03, 2012, 08:15:21 PM »
En sinthaiyil 
siru vinaa.? Ivvalavum
 sinthithavan
siragadika maranthathen
siragu mulaikaathathaala alla
siragu odinthu vidum enbathalaa alla
Sikkanamaai ezhutha ninaithathaalaa.

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்