Author Topic: நிஜங்கள் நிழல்களைத் தொடர்வதில்லை  (Read 1116 times)

Offline SweeTie

காலம் உன் கையில் இல்லை
ஆறாத காயங்கள் யாதும் இல்லை
மீளாத துயரங்கள்  எதுவும் இல்லை
மீட்டினால்  இசைக்காத வீணை இல்லை
தாலாட்டு பாடாத  தாயுமில்லை
காலையில் கூவாத  குயிலும் இல்லை
தொலைந்த கணங்கள் மீள்வதில்லை
நிழல்களை  நிஜங்கள் தொடர்வதில்லை

சோதனையில் வீழாத  மானிடர்கள்
சாதனைகள் எதுவும் படைப்பதில்லை
சங்கடங்கள் கண்டு  விலகி நின்றால் 
 சன்மார்க்கம்  என்றுமே புரிவதில்லை 
ஒரு கரம்  நீட்டி  ஈகை  செய்தால்
இரு கரம் கூப்பி  தொழ  தேவையில்லை
வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துகொண்டால்
வாழ்க்கையில் என்றுமே துன்பம் இல்லை 
 
« Last Edit: December 03, 2019, 07:31:55 AM by SweeTie »

Offline JoKe GuY

[  yES  Sweety all the probloms are temporary ..not permanent
 

[/]
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்