Author Topic: மண்ணுக்கு இரையாகி விடுவேனோ?  (Read 1995 times)

Offline SweeTie

இரவுகள் கடந்துபோகும்
நினைவுகள் தேங்கி நிற்கும்
கேள்விகள் பல உதிக்கும்
பதில்களை  தேடி நிற்கும்

கவலைகள் சிறகு விரிக்கும்
காற்றோடு கலக்கத் துடிக்கும்
கண்ணீர்த் திவலைகள் சிந்தும்
கைகள்  அதை மூடி மறைக்கும்.

எண்ணற்ற ஆசைகள்  எழுந்து
இதயத்தை  கூறாக்கி  ரணமாக்கும்
கண்ணுக்கு இனியவளைக் காணாது
மண்ணுக்கு இரையாகி  விடுவேனோ??

 
« Last Edit: November 23, 2019, 07:18:13 AM by SweeTie »

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 228
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Jothika.  Semma nalladhoru kavidhai. 

Thengi nindra ninaivugal dhanai thinnamaga theettiya kavidhai
Vaazhthukkal💐💐💐

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
'iravugal kadanthu pogum...
Ninaivugalum thengi nirkum'

thengi iruntha en ninaivugalum
satru thelinthathu pol irukirathu
thangalin varigalai
paditha udan...
arumaiyana kavithai jo Baby❤
thodarattum kavipayanam❤😍

Offline SweeTie

ஹார்ட்    நன்றிகள் .
ரித்திகா   நன்றிகள்.    தேங்கி இருக்கும்  உங்கள் நினைவலைகளை  எழுந்து  நடமாட விடுங்கள்.   .. ஆவலுடன்  எதிர்பார்க்கிறேன்.   

Offline சிற்பி

Jo ma 8) :D ;D
மெல்லியதாய் ஒரு கவிதை
மின்னலாய் அதன் வரிகள்
ஒருமுறை படித்தேன்
உண்மையில் வியந்தேன்
ஒவ்வொரு வரியிலும்
ஒவ்வொரு எழுத்திலும்
உயிர் தொடும் நினைவுகள்
அது உந்தன் நினைவுகள்


❤சிற்பி❤

Offline SweeTie

சிற்பி  நன்றிகள்.   

Offline JoKe GuY

MIGA MIGA ARUMAI
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்