Author Topic: முதலும் நீ முடிவும் நீ  (Read 1037 times)

Offline சிற்பி

முதலும் நீ முடிவும் நீ
« on: November 17, 2019, 09:22:21 PM »
காதலியே
என்னுயிர் காதலியே
பெண்ணே
உணர்விலே கலந்து என்
உயிரை ஏன் சிதைக்கிறாய்
உன்னை நான் நினைத்தால்
என்னை ஏன் வதைக்கிறாய்

வீசிடும் பார்வையில்
விந்தைகள் செய்கிறாய்
வீழ்ந்தது என் மனம்
விழிகளால் கொல்கிறாய்

ஒவ்வொரு நாளிலும்
உனக்கென வருகிறேன்
அழகே... நீ மட்டுமே இந்த
இதயத்தின் ஏக்கம்
உன்னோடு பேசிய நாட்களை விட
நீ வருவாயா என்று
ஏங்கிய நாட்களே அதிகம்

இந்த பூமியில்
எதுவும் நிரந்தரமில்லை
நீயும் நானும் கூட
ஆனாலும் அன்பே
எங்கோ ஓர் நாள்
நான் தொலைந்துபோனாலும்
உன்னை மட்டும் தொலைக்கமாட்டேன்

உலகமே வியந்து பேசும்
காதல் கதை இல்லை
என் காதல் கதை
அது உன்னையே வியந்து பேசும்

ஒரே நேரத்தில்
உனக்காகவும் எனக்காகவும்
துடித்து கொண்டிருக்கிறது
என் ஒரு இதயம்

காலம் என்னோடு
சில வலிகளை தந்தது
இந்த காதல் தானடி
எனக்கு கவிதைகள் தந்தது

என்றோ ஓர் நாள்
நான் இறந்து போவேன்
புரிந்துக்கொள்
அன்றுதான் உன்னை
மறந்துபோவேன்
ஆனாலும் ஆனாலும்

கடைசியாக
என் கல்லரையை
ஆயிரம் ஆயிரம் மலர்கள்
அலங்கரிக்கலாம்
அது நீ விடும்
ஒரு துளி கண்ணீருக்காக தான்
ஏங்கிக் கொண்டு இருக்கும்lor]






« Last Edit: November 17, 2019, 09:26:45 PM by சிற்பி »
❤சிற்பி❤