தைரியமாக பறந்து செல்...
அஞ்சாமல் பறந்து செல் ...
எங்கும் செல் ---ஆனால்......
மனிதம் இழந்த
மனிதர்கள் வாழுமிடம்
செல்லாதே...
அஞ்சாமல் பறந்தேன் ..
அப்பாவின் துணையோடு..
எங்கும் சுற்றினேன் ..
நீர் நிலைகள் காடு வயல்கள்..
அப்பப்பா ஆனந்தம் ....
மனிதம் இழந்தவர்களுக்கு
மத்தியில்..
மனிதர்களையும் சந்தித்தேன் ..
பசுமைகளை மறந்து
கான்கீரீட் காடுகளில்
வாழ்கின்றனர்