Author Topic: அன்புள்ள Masha உனக்காக  (Read 785 times)

Offline சிற்பி

அன்புள்ள Masha உனக்காக
« on: August 12, 2019, 12:28:44 AM »
அன்பே
உனக்காக கொஞ்சம்
அழுதேன்
அம்மா எனக்கு
இனி இல்லை
என நீ சொல்லும் போது

ஆனாலும் பெண்ணே
நானே எனக்குள்
ஆறுதல் ஆனேன்
நீ நம்
தமிழன்னை பெற்ற
தங்கமகள்
அல்லவா

உன்னோடும்
உன் மனதோடும்
அன்பே
நிச்சயமாய் சில
வலிகள் இருக்கும்

உயிரோடும்
உணர்வோடும்
நிறைந்தவள் நீ
இந்த புவியெல்லாம்
நம் சொந்தமடி

நீ எந்தன் அழகு
உன்னை விட
இங்கு யாரும் இல்லை
அழகாக

கவிதைகளை மட்டுமே
காதலித்தவன்
உன்னையும்
ஓர் கவித்துவமாய்
காதலித்து விட்டேன்

பயப்பட வேண்டாம்
பெண்ணே
இந்த காதல்
அன்பின் பரிமாற்றம்
மட்டுமே

யார் எப்படி
வேண்டுமானால்
பேசட்டும்
உன்னை நான் அறிவேன்
என்னை நீ அறிவாய்


அன்புடன்...... சிற்பி..

« Last Edit: August 12, 2019, 12:30:35 AM by சிற்பி »
❤சிற்பி❤

Offline MaSha

Re: அன்புள்ள Masha உனக்காக
« Reply #1 on: August 13, 2019, 01:11:15 AM »
thank you friend, nice poem!  :)