Author Topic: மன்மோகன் என்கிற சாத்தான் வேதம் ஓதுகிறது!  (Read 851 times)

Offline Yousuf


அணு சக்தி பயங்கரவாதம் எதிர்காலத்தில் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என மன்மோகன் சிங் திருவாய் மலர்ந்துள்ளார். 

அணு ஆயுதம் இல்லாத நிலையே உலகிற்கு பாதுக்காப்பானது என்றும் கூறியுள்ளார். தென்கொரியா தலைநகரில் நடக்கும் சர்வதேச அணு சக்தி மாநாட்டில் கலந்து கொண்டார் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்.

அதில் அவர் பேசியதாவது, அணு சக்தி பயங்கரவாதம் குறித்து இந்தியா விழிப்புணர்வோடு உள்ளது என்றும்  ரசாயனம், உயிரியல், மற்றும் கதிர்வீச்சு ஆயுதங்கள் பரவுவதை குறித்து தடுக்கும் ஐநாவின் தீர்மானத்தை நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்தியா முழுவதும் அணுஉலைகளை திறந்து வரும் மன்மோகன் சிங் என்கிற சாத்தான் வேதம் ஓதுகிறது. இந்தியா முழுவதிலும் மின்சாரம் தயாரிக்க அணு உலைகளை அமைக்கிறோம் என்று சொல்லி அதில் பெரும் பகுதியில் அணு குண்டு தயாரிக்க தேவையான யூரேனியம் சொரியூட்டும் வேலையை செய்து வருகிறது இந்தியா.

மேலும் இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் பேரழிவு ஆயுதங்களையும், ரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்திய இலங்கை பயங்கரவாத அரசுக்கு உறுதுணையாக இருந்த இந்த மகாத்மாக்கள்தான் இப்போது சர்வதேச அளவில் வெக்கம் இல்லாமல் பொய் பேசித்திரிகிறார்கள்.

இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறை, ஏழை உழைக்கும் மக்களுக்கு எதிரான ஒரு பன்னாட்டு சுரண்டல், அரசு பயங்கரவாதம் என்று அனைத்து அளிச்சாடியங் களையும்  செய்யும் லோக்கல் ரவுடிகள் உலகமக்களிடம் சமாதனப்புறா பறக்க விட்டிருக்கிறார்.

இதைத்தான் "முழிச்சிக்கிட்டு இருக்கும்போதே முழியை (கண்ணை) தோண்டுவது" என்று பழமொழியாக சொல்வார்களோ.