Author Topic: மனிதகுமாரன் இயேசு நாதர்  (Read 656 times)

Offline சிற்பி

மனிதனாக மறைந்து
அவர் கடவுளாக பிறந்தார்
தத்துவம் தத்துவம்
மனிதனும் கடவுளும்
ஒன்றுதான் உணர்ந்தோம்

அவர் மனிதனாக பிறக்கையில்
சிலுவையில் அறைந்தோம்
கடவுளாக வரும்போது
சிலுவையும் தொழுதோம்
நித்திய ஜுவனின்
சத்திய சாட்சிகள்

யாவரும் வாழ்ந்திட
எத்தனை வழிகள்
நீ பெற்றவை
யாதுமே வலிகள்

கடவுளின் தூதராய்
கர்த்தரும் பிறந்தார்
கடவுளும் வணங்குமோர்
கடவுளாய் உயர்ந்தார்

அன்பே இந்த உலகாளும்
மந்திரம்
அதுவே இயேசுவின்
அடிப்படை தத்துவம்

ஆதாம் ஏவாள்
ஆதியின் பிறப்பு
விவிலிய வேதம்
வாழ்க்கை பாடம்

மனிதன் வாழ்வில்
ஒரு முறையாவது
யேசுவின் போதனைகள்
படிக்க வேண்டும்
அவர் சொன்ன
அன்பின் வழியில்
போகலாம்
... சிற்பி





❤சிற்பி❤