எதுக்காகவும் இழந்துரக்கூடாதுனு
ஒருத்தர இறுக்கமா பிடிச்சி நின்னுருக்கீங்களா?
ஆயிரம் குறை உங்க முன்னாடி
அவங்க பேர்ல கொட்டிக்கிடக்கும் போதும்
அதுலாம் பொய்யா இருக்கனும்னு
எங்கயாவது பைத்தியக்காரத்தனமா
நம்பிட்டு இருந்துருக்கீங்களா?
கைவிட்டு போய்டும்னு தெரிஞ்சும்
அது மேல அன்ப கொட்டியிருக்கீங்களா?
நம்மளோடது இல்ல
நாமளும் அதுக்கானது இல்லனு தெரிஞ்சப்றமும் கூட
வெறுக்க முடியாம பழையபடி இருக்கவும் முடியாம
ரெண்டுக்கும் இடையில் அவங்க நல்லாருக்கனும்
அவ்ளோதான்னு ஒரு பிரார்தனைய மட்டும்
கையில வச்சுட்டு நின்னு இருக்கீங்களா?
திரும்ப கடந்தகாலம் போல வாழ முடியாது
அதுக்கான சாத்தியம் இல்லவே இல்ல.
இனி எப்பவும் எதிர்ல வரவே போறதில்லனு தெரிஞ்ச
இறுதி சந்திப்புல கைகுலுக்கி நல்லாருனு சொல்லி
நலம்காத்துக்கற வேண்டுகோள்கள மட்டும்
முன்வச்சிட்டு கேக்கறதும் கேக்காததும்
உன் இஷ்டம் சொல்றது என் ப்ரியம்னு சொல்லி
கையவிட்டு நகர்ந்து போய்ருக்கீங்களா ?
இது இறுதி இல்ல இது இறுதி இல்லனு
ஒவ்வொரு தடவயும் தேக்கி வச்ச உறவு ஒன்னு
நிஜமாவே இறுதியா எதிர்ல நிக்குதுனு தெரிஞ்சப்றமும்
அத சந்தோஷமா ஒவ்வொரு நொடிக்கும்
உங்கள தயார்படுத்தி போய் இருக்கீங்களா?
இறுதியிறுதியா எல்லாத்தையும் விட்டுட்டு
எப்பவாவது பாத்துக்கிட்டோம்னா
வருத்தப்பட எதுவும் இருக்கக்கூடாது
நல்லபடியா பிரிஞ்சு போவோம்னு
நடந்த அத்தனை காயத்தையும்
கண்மூடித்தனமா மறந்துட்டு சிரிச்சபடி
ஒரு பிரிவ பாத்து நகர்ந்து இருக்கீங்களா?
பிரிவுக்கு அப்றமும் அவங்க பெயருக்குனு
அவங்க பேச்சுக்குரல்குனு
அவங்க பிறந்தநாள் தேதிக்குனு
ஒரு ப்ரத்யேக வாசனையும்
அதுக்கான கொண்டாட்டமும் உணர்ந்துருக்கீங்களா?
நம்ம கையில இனி எதுவும் இல்ல
நம்மளோடது இல்லனு தெரிஞ்ச ஒன்ன
உயிரா இன்னமும் நெனச்சிட்டுதான் இருக்கோம்
அது கையவிட்டு போறத பாக்க
திரணியில்லாம ஓடிஒளிஞ்சிட்டு தான் இருக்கோம்
இதான் கரைகாணாத அன்புனு நான் நம்பறேன்.
பிரியங்களின் பித்தில் நிர்பந்தங்களுக்கு இடமில்லை
என்றுணர்ந்த நாளில்
மேற்கூறிய அத்தனையும் சாத்தியம்.
அன்பு நிபந்தனையற்றது ❤❤