ஓர் மத்தியான வெயில் பொழுதுகள் ..
தியானத்துக்கு சமமோ ....
விருந்து உண்டவர்க்கு ..
வீழும் உண்ட மயக்கம் ..
ஏழைகற்கோ பசி மயக்கம் ..
ரெண்டும் ஒன்றேயென ..
வாழும் யோகிக்கற்கோ ..
தியான மயக்கம் ...
புழுதி பறக்கும் மண் சாலையின்
புலரா தடங்கள்...
மர கிளைகளின் கூட்டம் ..
நிழல் கோடுகளாய் விரியும் ..
வட்ட வட்ட இலைகளோ ..
காசுகளை அள்ளி இறைத்தற் போல ..
தங்க நாணயங்களாய் சிதறி கிடக்கும்..
எடுத்து செல்வார் இன்றி ...
ஏங்கி தவிக்கும் ..
உச்சி வெயில் சூரியனும்
ஓய்வெடுக்க போகையில் ..
ஊர் ஓர ஆற்றங்கரையில் ...
புறம் பேசும் நாணல்கள் ...
சலசலக்கும் நீரும் ..
அமைதியாய் கதை கேக்கும் ...
எங்கேயோ கரையும் காக்கையின்
கரைதலில் கரையும் ...
பொழுதுகளும் நினைவுகளும் ...