Author Topic: நினைவுகளில் தேங்கி சென்ற எனது காலங்கள் !  (Read 850 times)

Offline JasHaa


நினைவுகளில்  தேங்கி  சென்ற  எனது காலங்கள்
காலங்களில் காலூன்றி  சென்ற உனது காதல்
தவறிழைத்தது விதியின் விளையாட்டா?
எங்கு தவறிச்சென்றது  நமது  பயணம்
விடியலில் மலரதுடித்த  ஆம்பலின்  மீது
அமிலம்  வார்த்தது  யாரது  குற்றம் ...

சிப்பியினுள் புதைந்த  முத்து போல்
உன் சிநேகத்தினுள் ஆழ்ந்து  போனது
ஆழிப்பேரலையாக  அள்ளிக் சுருட்டுகிறது
உன்னுடைய நினைவுகளும்   கனவுகளும்....

 கண்ணை இறுக மூடிக்கொண்டாலும் கனவுக்குள்
 வந்து மிரட்டுகிறாய்  மீண்டும் மீண்டும் என்னிடமே....
ஓடி ஒளிந்து கொள்ள தான் நினைக்கிறேன்...
உன்னுடைய நினைவுகளை மறந்து துறந்து
நிகழ்வுகளை  மறந்து போக மறுக்கிறது மனம்....

ஒவ்வொரு நாளும் கனவில் ரீங்காரமாய் 
ஒலிக்கும் பாடல்  வரிகளில்  அதிர்ந்து தான் போகிறேன்....,
இரவில் தூக்கத்தில்.....
தூக்கத்தை தொலைத்த  பாவை  இவளின்
ஏக்கத்தை  தீர்ப்பார்  யாரோ  !!!

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 229
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
இதுவும்  கடந்து போகும்,  எதுவும்  மறந்து போகாது.
நினைவுகள் நெஞ்சில் இருக்கும் வரை, 
நிரந்தர பிரிவு என்றும் இல்லை...

வாழ்த்துக்கள்  நல்லதொரு  கவிதை. 💐💐💐

Offline JasHaa

நன்றி   unique (F)

Offline Guest 2k

அண்ணி 😘 கடந்து வந்த காலங்கள் கடந்தவைகளாகவே இருக்கட்டும்

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்