Author Topic: குண்டு குழந்தையா? மணிக்கட்டை கவனிங்க !  (Read 828 times)

Offline RemO

உடல் பருமன் அதிகம் உள்ள குழந்தைகளின் மணிக்கட்டினை வைத்தே அவர்களுக்கு இதயநோய் பாதிப்பு ஏற்படுமா என்பதை கண்டறிந்து விடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மணிக்கட்டு பெரிதாக உள்ள குழந்தைக்கு இதய நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குழந்தைகளிடம் மணிக்கட்டு பெரிதாக உள்ள நிலை குறித்து இத்தாலியைச் சேர்ந்த ரோம் சாம்பியன்சா பல்கலைகழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். உடல் எடை அதிகம் உள்ள 500 குழந்தைகளின் மணிக்கட்டு பகுதியில் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இவ்வாறு மணிக்கட்டு பெரியதாக உள்ள குழந்தைகளுக்கு இதயநோய் பாதிப்பு ஏற்படும் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் பெரும் மணிக்கட்டு எலும்பு பகுதியில் இன்சுலின் தடுப்பு 20 சதவீதம் அதிகரித்து இருப்பதை தெரியவந்தது. இதனால் நீரிழிவு பாதிப்பு ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் அதிக உடல் எடையும், அதிக கொழுப்பும் கொண்ட இளைஞர்கள் பெரும்பாலானோர் இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் உடல் அமைப்பில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அவர்களின் நோய் பாதிப்புகளும் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மணிக்கட்டு அளவிற்கும் இன்சுலின் தடுப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆரோக்கியமான எடை உள்ள குழந்தைகளிடம் அடுத்தகட்ட ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் மார்கோ காபிசி கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவு அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.