
அந்த சின்னஞ்சிறுப் பிஞ்சு விரல்களைக் கொண்டு
தரையில் ரேகைப் பதித்துக் கொண்டிருந்தாள்
கிழவியாகப் பேசிச் சிரிப்பவள் குழந்தையாயிருந்தாள்
எப்போதுமே மடியமர்த்தும்
அவள் எனக்கு சிறப்பானவள்
என் நுனி நரம்பின் தடிமனில் இருக்கும்
அவள் மடியில் கிடந்தேன் பலநாள்
அலாதிகளாய் எனக்குக் கதைக் கூறினாள்
வந்தவர், போனவர் என்று குழப்பமான
கதைகளை உருவாக்கிக் கொண்டேயிருந்தாள்
கொஞ்ச நேரம் கூட அவளை
அமைதியாக ஓய்வெடுக்க விடுவதில்லை
வானரத்தைப் போல் என் தலையில்
ஈரெடுத்துக் கொண்டே இருப்பாள்
அவளுக்கு தெரியாது என்றாலும்
அந்தப்பிஞ்சு விரல்கள் எனைத் தீண்டுகையில்
தரையிலிருந்து சற்றே உயரப் பறப்பதாய் தோன்றும்
நான் அழுத்தமாக முத்தமிட்டாலே
தாங்க மாட்டாள் இதுவரை என் தலையின்
முழு எடையை அவள் மடியில் வைக்கவில்லை
கழுத்தைத் தூக்கிக் கொண்டே
சுகமாய் இருப்பதைப் போல்
நடித்துப் படுத்துக் கிடக்கிறேன்
அவளும் இவனுக்கு நிம்மதிதான்
என்று நிம்மதியாகிறாள்
அவள் பயத்தில் செய்கிறாளா
பொழுதுபோக்காய் விளையாட்டுக்கு
செய்து கொண்டிருக்கிறாளா என்று தெரியவில்லை
என்னைப் பொறுத்தவரை
அந்தப் பிஞ்சு விரல்களின் தீண்டலிற்கு
நிகரானத் தாய்மடி சுகமில்லை என்பதாலே
வற்புறுத்தியாவது கோதச் செய்கிறேன்
#ஆக_அவள்_மடியில்...❤