மழையில் நனையாதே
சளிப்பிடிக்குமென்ற
அம்மாவின் மழலை விதிகள்
நாணம் களைந்தொருநாள்
நனைவோமாவென்ற
நடுவயதின் ஏக்கம்
கூதற்காற்றுப்பட்டாலே
குலைநடுக்கம் கூடிவிடுமென்ற
மூத்தகுடிகளின் முழுமுதற்பயம்
இவைகள் தவிர்த்து
இன்று பெய்வது
சாறலோ தூறலோ
தவறாமல் நனைந்துகொள்ளுங்கள்
நீண்ட கட்டிடங்களிலேறி
நின்றுகொண்டே
நிலாத்தொடும்
நாளைகளில் நனைய
மழையுமிருக்காது
நீங்களும் இருக்க மாட்டீர்கள்