Author Topic: புதையல்  (Read 766 times)

Offline SweeTie

புதையல்
« on: June 07, 2019, 11:01:53 PM »
வார்த்தைகள் இல்லாத மௌனம்
நடு நடுவே ம்ம்ம்ம்ம்  எனும்
ஊமை ஓசைகளின்  ஊசலாட்டம்
கண்மூடி சிந்திக்கும் மணித்துளிகள்
காரணமற்ற  மௌன யுத்தம்

குழலும்  யாழும்  குரலில் இழையோடியதோ 
நட்ச்சத்திர கூட்டத்தின் நடுவே  நீ
என்றும் மறையாத முழுநிலவு
சிந்திய முத்துக்களை அள்ளியே கோர்த்தது
சிதறிப்  போனதுவோ இன்று . 

நிரந்தரமில்லாத  மானிடவாழ்க்கை
நின்று  சிந்திக்க கொடுத்த நிமிடங்களில் 
வாரி இறைத்த அன்பு  வற்றிவிடுமா?
சேர்த்துவைத்த சொந்தங்கள் ஒதுங்கிவிடுமா?

காற்றோடு கலந்த மூச்சுக்கள்
கசங்கி காணாமல் போய்விடுமா?
நேற்றோடு நெருங்கிவந்த உறவுகள்
சேற்றோடு  புதைந்துவிடுமா?   
காலமே நீ  பதில் சொல்வாயா?