Author Topic: காகிதப்பூ_காதல்...❤  (Read 769 times)

காகிதப்பூ_காதல்...❤
« on: May 07, 2019, 03:08:37 AM »
அழுது கரைத்த மனத்தீவின்
பாதை மணலனைத்தும்
திட்டுகளாகிக் கீறிக்
கிழிக்கத் தொடங்கி விட்டது.
ஒவ்வொரு திட்டுகளின்
இடைவெளியிலும் ஓராயிரம்
தீப்பந்தங்கள் எரிகின்றன.

சுட்டெரிந்த தசை நார்களைக்
குருதியில் புரட்டி, நாவு வடியத்
திண்பதில் தான் உனக்கு
அத்தனை ஆனந்தம்..!!
நீ எப்போதுமே படர்ந்து
கிடந்த கனவுத் திடல்
பெரும்பள்ளமாகிப் போனது..!!

அன்பும், பரிவும், நேசங்களும்
நிறைவாகியிருந்தப் படலத்தில்
வெந்தனலையும்,
செங்குருதியயையும் நிறைத்த
கொடூரம் உன்னையேச் சாரும்.
உன்னிடமிருந்த அனைத்திற்கும்
கேடானவைகள் அனைத்தும்
என்னிடம் கொட்டப்பட்டு விட்டது.

என்னைக் காட்டிலும் உருகிக்
கருகித் துயிலாதுப் படியாதுக்
காதலிக்க இன்னொருவனையும்
எந்தத் தாயாலும் பிரசவித்து விட
முடியாது. அப்படியே வந்தாலும்
உன் நாவிற்குப் பின்னாடியான
வலியையோ, நாசிக்குப்
பின்னரான சளியையோ
சலிப்பாகத் துப்பி விட்டுச்
சென்று விடுவான்.

வான் ஒப்பாத என் ஒட்டு
மொத்தப் பேரன்பையும்
திணித்து வைத்த நீ தாங்காது
தாள வீழத் தயாராகியுள்ளாய்.
வேர்ப் புகையிலைச் சுவைத்துக்
காரி உமிழ்ந்த கழிவு
எச்சிலாய்த் தூக்கி எறிந்து
விட்டிருக்கிறாய் என்னை.

எனக்காய் நீயும், நீயாய்
நானுமே வாழ்ந்திடாமல்
அத்தனைத் தொகைக்
காதலையும் காகிதப்
பூவாய் கசக்கி எறிந்து
விட்டிருக்கிறாய். ஆனால்,
அடிமையான மனதேனோ
தன் ஆதியையேத் தேடித்
திரிந்து ஏமாந்து விடுகிறது.

பிழைகளோடு ஆனவன்...

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: காகிதப்பூ_காதல்...❤
« Reply #1 on: May 10, 2019, 10:53:58 PM »
வலியின் வார்த்தைகள்