உன் குரல் போல
அத்தனை சாந்தமாய் இல்லை 
உன் மௌனம்..
அதெற்க்கென்றே காரணங்கள் ஆயிரமிருக்கலாம்
இல்லாப்பொழுதொன்றில் 
உருவகித்த  ஒரு கற்பனை கணம் 
இப்படி கொடூரமாய்  
இருந்ததாய் தான் நியாபகம் 
அந்திசாய்ந்த பின் 
பாடிக்கரையும் 
குயிலொன்றின் மனநிலை குறித்து
பெரிதாய் குறிப்பொன்றும் வரைந்துப்போவதில்லை
அதன் குரல் 
மற்றபடி
உனக்கான மீட்சிமைகளில்  
தொலை(த்)தலும் ஒரு படிநிலையே 
பிடிப்பற்றுப்போகும் 
இரவுகளை கொண்டாடத்தான் 
முடிவதில்லை...