Author Topic: எங்கும் எதிலும் கவிதை  (Read 972 times)

Offline thamilan

கிழக்கில் வெளிச்சம்
சூரியக் கவிதை
இரவில் மின்னும்
நட்சத்திரக் கவிதை

மழையை பொழிவது
விண்ணின்  கவிதை
நல்ல மகசூல் தருவது
மண்ணின் கவிதை

தத்தி வருவது
அலைகளின் கவிதை
தவழ்ந்து வருவது
மழலையின் கவிதை

தேடல் என்பது
வாழ்வின் கவிதை
ஊடல்  என்பது 
காதலின் கவிதை

சங்கீதம் என்பது
ஸ்வரங்களின் கவிதை
சிலைகள் எல்லாம்
உளியின் கவிதை

ஓவியம் என்பது
நிறங்களின் கவிதை
ஒளி மயமாவது
விளக்கின் கவிதை

சோலை வனங்களில்
குயில்களின் கவிதை
உலகமெல்லாம் ஒலிப்பது
யின் கவிதை