Author Topic: நானும் நிலவும்  (Read 775 times)

நானும் நிலவும்
« on: March 23, 2019, 01:07:48 PM »
வெளிவரும்
வெளிச்சத்தில் எங்களின்
தனிமையை
மூடிமறைத்துக் கொள்ள
எப்போது விடியுமென்று
ஒன்றாகக் காத்திருக்கிறோம்
நானும்
நிலவும்
பிழைகளோடு ஆனவன்...

Offline Jabber

Re: நானும் நிலவும்
« Reply #1 on: March 28, 2019, 02:03:45 PM »
வணக்கம் இளஞ்செழியன்...
   
                          உங்கள் படைப்புகளை வாசித்து வருகிறேன்..பெயரைப்  போலவே இளமையும் மொழியில் செழிப்பும் சேர்ந்த கலவையாய் தருகிறீர்கள்..ஹைக்கூ வகையறா கவிதைகள் அழகியலை படம்பிடித்து சுருக்கமாக தருகிறது..தனித்தனியாய் கவிதைகளுக்கு ஆங்காங்கே பதில் இட நேரமும் பொறுமையும் இல்லாத காரணத்தால் இங்கு பதிவிடுகிறேன்..தொடர்ந்து எழுதுங்கள்..வாசிக்க ஆர்வமாய் இருக்கிறேன்..
                       
                   நன்றி..