Author Topic: அன்பின் சமதளங்கள்  (Read 745 times)

அன்பின் சமதளங்கள்
« on: March 11, 2019, 03:09:50 PM »
உயரங்கள்
பரவசமாயிருக்குமளவுக்கு
பாதுகாப்பாயில்லை 

ஆழங்கள்
பத்திரமாயிருந்தாலும்
பயமாயிருக்கிறது.

சந்தோசமாயில்லையென்றாலும் 
சமாதானமாக இருக்கிறது
அன்பு சமதளங்களில்.
பிழைகளோடு ஆனவன்...

Offline Guest 2k

Re: அன்பின் சமதளங்கள்
« Reply #1 on: March 12, 2019, 04:06:30 PM »
அருமையான கவிதை நண்பா. sorry ஒரு பரிசோதனை முயற்சியாக முதல் நான்கு வரிகளை மட்டும் மாற்றி போட்டு பார்த்தேன்,

உயரங்கள்
பாதுகாப்பில்லையெனினும்
பரவசமாயிருக்கிறது

ஆழங்கள்
பயமாயிருப்பினும்
பத்திரமாயிருக்கிறது

எப்படி படிச்சாலும் அழகாயிருக்கு நண்பா :)

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்