விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் ஓடித் திரியும்
அலைபாயும் எண்ணங்களின்
எண்ணற்ற கால்களுக்கு
நினைவுகளின் தளைகள்
ஒரு பொருட்டல்ல
உடலெங்கும் பற்றி பரவும் எண்ணக் கால்களை
உதறி எறிந்திட ஒவ்வொரு நினைவுகளையும் தளையிலிருந்து
விடுவிக்க வேண்டியுள்ளது
ஒவ்வொரு நினைவுகளையும் விடுவிக்க விடுக்க
புதிதாய் முளைக்கிறது ஓர் எண்ணக் கால்
நினைவடுக்களின் மீதேறி நிற்கிறது மற்றொரு நினைவு
கண்களை இறுக்க மூடி தளைகளை
அறுத்தெறிய முயல்கையில்
புதியதொரு இறுக்கம்
ஒரு தளை
ஒரு நினைவு
ஒரு எண்ணம்