யாருமில்லாத வெட்ட வெளியிலும்,
தன்னந்தனியே மொட்டைமாடியிலும்
ரசிக்க முடிகிற வெண்ணிலவும் விண்மீன்களும்
கோளரங்கத்தில் அழகாக தென்படுவதில்லை.
என்னை நானாகவே காண்பிக்க இயல்கிற
வெட்டவெளி எனக்கு பிரியமானது.
உன்னை நீயாகவே பார்க்க முடிகிற
மொட்டைமாடியும் எனக்கு பிடித்தமானது.
ஒப்பனைகளற்ற இயல்பான இருப்பே தூய்மை.
தூய்மை எனப்படுவது கம்பீரமானது.
கம்பீரமான எதுவுமே அழகானது.
ஒப்பனைகள் எப்பொழுதும் களங்கப்படுத்தவே செய்கின்றன.
கலைந்து விடுபவை இந்த வேடங்கள்,
கரைந்து போகும் அந்த சாயங்கள்