Author Topic: என் நினைவுகளில் நீ  (Read 648 times)

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
என் நினைவுகளில் நீ
« on: February 21, 2019, 02:22:51 PM »


எங்கோ கூவும்
குயிலின் கீதத்தில் ...
உயிர்த்து எழுகிறது உன் நினைவுகள் !
நீண்டு விட்ட ரயிலின் கூக்குரலில் ..
ஒரு  வினாடி நின்று துடித்தது இதயம் !

என் உறக்கங்களை உண்டு விட்டு . ...
சலனமில்லாமல் உறங்குகிறாய் நீ!
கண்களின் இமைகளில் ..
கனவுகளின் பாரம் தாங்காமல் ...
கண்ணீர் துளிகள் கசிகின்றன !

சிந்தனையை களவாடிய நீ...
சிறிதும் கலங்காமல் சிரிக்கிறாய் !
சிறைகள் தான் சாஸ்வதம் என்றால்...
சிறகுகள் ஏன் தந்தாய் !

நீ இல்லாத இடம் தேடி பார்க்கிறேன் !
அங்கே போய் மறைந்து கொள்ள ...
தேடும் போது மறைந்து ...   
தேடாத போது ..கண்ணில் வந்து ..
கண்ணாமூச்சி ஆடுகிறாய் !