Author Topic: ஓர் தேநீர் மாலையில்......  (Read 701 times)

Offline Guest

ஓர் தேநீர் மாலையில்......
« on: February 18, 2019, 12:17:43 AM »
மனம் உருக்கும் ஒரு இசைக்கீற்றின்
இலாவகத்தோடு இதயத்தின் உள்நுழைகிறாய் நீ...

ஹேம்லின் நகரத்து வண்ண உடையணிந்த
காற்றிசைக்கருவி வாசிப்பவர் போல
உன்னை பின்தொடர்ந்து அணிவகுக்கிறது
எங்கோ எப்போதோ தொலைந்து போனதாய்
மனம் கொண்ட நினைவுகள்...

நினைவுகளில் நீ இருப்பதாலே
மீண்டும் வந்து ஒட்டிக்கொள்கிறது
மனதோடு உன் எண்ணங்கள்
வீணையோடுயுள்ள இசை கீற்றுப் போல
நதியோடு நாணம் கொண்ட தென்றலைப் போல

நீ வருவதாய் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது
காற்றோடு அசையும் திரைச்சீலைகளும்
கட்டினில் மேல் திசை மாறாமலிருக்கும்
தலையணையும்
மழை நேரத்து சாறாலை
இரசித்தபடி
கொஞ்சம் தேநீரோடு
நானும்......
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline Guest 2k

Re: ஓர் தேநீர் மாலையில்......
« Reply #1 on: February 19, 2019, 08:22:09 AM »
வாவ்வ்வ் என்னா மாதிரி கவிதை. அட்டகாசம் நண்பா. மெல்லிய இறகின் வருடல் போல 💜

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline regime

Re: ஓர் தேநீர் மாலையில்......
« Reply #2 on: February 19, 2019, 09:41:00 AM »
superr nanbaa semaya iruku  :-* :-* :-* :-*