Author Topic: அதுஎன்ன கண்கள்?  (Read 895 times)

Offline JasHaa

அதுஎன்ன கண்கள்?
« on: February 16, 2019, 02:47:07 PM »
அந்திவான சிவப்பு.. 
ஆளில்லாத அரசமரத்தடி.. 
பஞ்சடைத்த நினைவுகள்..
பின்நோக்கி செல்லும் பார்வை
இமைமூட கட்டளையிடாத கண்கள் 

அதுஎன்ன கண்கள்? எங்கோ நிலைகுத்தி
கண்களில் காட்சிகள் மட்டும்
காட்சிப்படுத்த படுவதில்லையே!

கனவுகளை தேக்கிவைக்கும்
நினைவு பெட்டகமாய் மனம்
பெட்டகத்துக்கு நினைவுகள்
சேகரிக்கும் கண்கள்..

வாழ்வின் திசைகளை தேடி
ஸ்பரிஷபார்வைகளுக்கு ஏங்கிதவித்து 
தீயாய் தகிக்கும் வக்கிர பார்வைகளை தாங்கி
உறவுகளின் சுயநல நிகழ்வுகளுக்கு சாட்சியாய்
மௌன தேடலில் என்றுமே
யாரை?எதற்காக? எப்பொழுது?-வினாக்களுக்கு
விடையில்லாது தேடும் பார்வைகள்..

விழிகளின் மின்னல்  பார்வைகள் - காதலோ 
விழிகளின் சமிக்கை  பார்வைகள் - ரகசியமோ 
விழிகளின் கொஞ்சல் பார்வைகள் - கூடலுக்கோ
விழிகளின் கெஞ்சல்  பார்வைகள் - பரிதவிப்புக்கோ 
விழிகளின் உக்கிர  பார்வைகள் - துரோகங்களுக்கோ
எதுவாயினும் பொக்கிஷமாய் , அதன் பெட்டகமாய்....!

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3742
  • Total likes: 3742
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: அதுஎன்ன கண்கள்?
« Reply #1 on: February 16, 2019, 08:34:23 PM »
அதே கண்கள் சீரியல் பாத்திட்டு எழுதினீங்களா  :D :D

சிறப்பு மிக சிறப்பு

தொடர்ந்து எழுதுங்கள்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JasHaa

Re: அதுஎன்ன கண்கள்?
« Reply #2 on: February 17, 2019, 04:03:01 PM »
நன்றி ஜோக்கர் .

Seriyal பார்த்தேனோ இல்லையோ ஆன   அழுவலே:D : D