நீண்ட பொழுதுகள் மீட்டும்போது
உன் ஞாபகம் அடிக்கடி வருகிறதே
தினம் தினம் பார்க்கும் கண்ணாடி
உன் விம்பமும் காட்ட மறுக்கிறதே
தூறல் மழையில் நனைந்தவேளை
துவட்டிய கைகள் மறைந்தனவே
பார்வையின் அர்த்தங்கள் புரியுமுன்னே
பகலவன் போலவே மறைந்தாயே
புள்ளிகள் நீயிட கோலமும் போட்டேன்
தள்ளியே நின்று ரசிக்கின்றாய்
வெள்ளிகள் உலாவரும் பின்னிரவில்
வாஞ்சையில் இருப்பேன் வந்துவிடு