Author Topic: மருத்துவ குணம் கொண்ட கற்றாழையில் பானங்கள்:  (Read 1051 times)

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1812
  • Total likes: 2293
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
மருத்துவ குணம் கொண்ட கற்றாழையில் பானங்கள்:

கிராமப்புறங்களில் திரும்பிய பக்கம் எல்லாம் வளர்ந்திருக்கும் கற்றாழையில் தான் எத்தனை மருத்துவக் குணங்கள். கற்றாழைக்கு குமரி, என்ற பெயரும் உண்டு. கற்றாழையில் பலவகைகள் உண்டு.

சோற்றுக்கற்றாழை, சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கற்றாழையை அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றாழையில் உள்ள ஆலோயின் முகப்பூச்சு க்ரீம்களின் தயாரிப்புகளில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். உடற்சூடு தணித்து, சிறுநீர் தாரைகளின் எரிச்சலை நீக்கும்.

சோற்றுக் கற்றாழை பயன்படுத்தும் முறை:

சோற்றுக்கற்றாழை மடல்களைப் பிளந்து, கண்ணாடி போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீரில் 7 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்த வேண்டும். கற்றாழையைக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் கசப்பும் குறைந்துவிடும்.

சுத்தப்படுத்திய நுங்குசுளைப்போல இருக்கும் கற்றாழைத் துண்டங்களை அப்படியே சாப்பிடவும் செய்யலாம். சாறு, சர்பத், அல்வா என்று விதவிதமாக சமைக்கிறார்கள்.

கற்றாழை ஜூஸ்:
மலிவு விலையில் மகத்தான பானம். உடற்சூட்டை உடனேத் தணிக்கும் இந்த பானம்.

தேவையான பொருட்கள்: கற்றாழை துண்டுகள், எலுமிச்சை, தேன்.

செய்முறை:
சுத்த படுத்திய கற்றாழை துண்டுகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதனுடன் தேவையான, எலுமிச்சை சாறு, நீர் மற்றும் இனிப்புக்காக பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து குடிக்கலாம்.

கற்றாழை லஸ்ஸி:
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த கற்றாழை துண்டுகள், இந்துப்பு, புதினா இலைகள், கட்டித் தயிர், ஐஸ் கட்டிகள்.

செய்முறை:
மிக்ஸியில் கற்றாழையை நைசாக அரைத்து கொள்ளவும். இதனுடன் ஐஸ் கட்டிகள், தயிர், இந்துப்பு கலந்து அடிக்கவும். நுரைத்து ததும்பும் லஸ்ஸி பருக தயார்



உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால