Author Topic: காதல்!!  (Read 771 times)

Offline Guest

காதல்!!
« on: January 05, 2019, 10:22:47 AM »
காதல்!!

பருகி தீராத பெருநதி,
பகிர்ந்து குறையாத ஞானம்,
காட்டி முடியாத பேரன்பு,
மனமார்ந்த பிரார்த்தனை,
எளிய ஓர் இறைவணக்கம்,
கொடுத்து செழிக்கும் பெருஞ்செல்வம்,
தோற்றுக் கொடுத்தலின் பெரும் வெற்றி.

விட்டுக் கொடுத்தல்களில்
ஆனந்தம் கொள்ளும் வரை
காதல் தீர்வதில்லை.

எதிர்பார்ப்பு சுமைகளால்
அன்பின் முதுகெலும்பு
முறிக்கப்படாதவரை காதல்  அலுப்பதில்லை..

என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ