Author Topic: என் புத்தாண்டு பரிசு!!!  (Read 1633 times)

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
என் புத்தாண்டு பரிசு!!!
« on: December 31, 2018, 10:21:23 PM »
சற்றே புன்னகைத்துவிடு மகளே..
நல்ல மாறுதல்கள்
பிறக்கட்டும்..
நீ.இருக்குமிடத்தி்ல்
உன்னால் மற்றவர்கள்
மகிழ்ச்சிப்பொன்னகைக்கட்டும்...!!
.
ஆறுதல் பெறுதலைவிட
ஆறுதல் தருதலி்ல் இருக்கிறது
உன் மனமாறுதல் மகளே..!
.
இன்பம் எப்போதும்
உன் பரிவில்தான் பிறக்கிறது
பிறர் பிரிவிலல்லவே மகளே...
.
நான் பாசத்துக்குரியவள்
நான் நேசத்துக்குரியவள்
நான் அன்பிற்குரியவள்
என பிரகடனப்படுத்தவே
ஒரு முறை புன்னகைத்துவிடு மகளே...!!
.
ஒவ்வொரு முறையும்
நம்முடன் பயணித்து
இயற்கையெய்தும்போதும்
ஏதோ சேதி சொல்லிச்செல்கின்றன
வருடங்கள்...!!
.
நாளைய நாட்களில்
நாம் புன்னகைப்பதைவிட
மற்றோரில் புன்னகையாய்
வாழ்ந்திடுவோம் மகளே.....!!

.
எனக்கான புத்தாண்டு பரிசாக
இக்கவியை புனைந்தவருக்கும்
மற்ற நண்பர்களுக்கும்
என் மனம் நிறைந்த
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!!

Offline Guest 2k

Re: என் புத்தாண்டு பரிசு!!!
« Reply #1 on: December 31, 2018, 10:30:22 PM »
சம்யூ, இனிய இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இன்றிருக்கும் தெளிவும் வளமும் நலமும், மகிழ்வும் என்றென்றும் நிலைத்திருக்க என் வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும். கடந்தவைகள் கடந்தவைகளாகவே இருக்கட்டும், காலம் ஆற்றுப்படுத்தும் அனைத்தையும். பிறக்கும் வருடமட்டுமன்றி எல்லா வருடங்களும் வெற்றி தரும், அமைதி தரும், மகிழ்வு தரும் வருடமாக இருக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்
« Last Edit: December 31, 2018, 10:32:56 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline சாக்ரடீஸ்

Re: என் புத்தாண்டு பரிசு!!!
« Reply #2 on: January 01, 2019, 12:14:08 AM »


Happie new year my dearest brother junior samyukthaaaaaaaaaaaa


Offline DoRa

Re: என் புத்தாண்டு பரிசு!!!
« Reply #3 on: January 01, 2019, 12:16:56 AM »
Happy New Year Kozhii :-*


   kokaroo      Sokarooo       Dokaroo
« Last Edit: January 01, 2019, 09:06:50 PM by DoRa »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3742
  • Total likes: 3742
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: என் புத்தாண்டு பரிசு!!!
« Reply #4 on: January 01, 2019, 11:57:56 AM »
எல்லா வளமும் பெற்று நீ வாழ
என் வாழ்த்துக்கள் சகோ

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: என் புத்தாண்டு பரிசு!!!
« Reply #5 on: January 01, 2019, 01:05:40 PM »
சிக்கு என்றும் உங்கள் அன்பிற்கு உகந்தவளாக இருக்க விரும்புகிறேன்... இந்த ஆண்டில் இறைவன் உங்களை அபரிவிதமாக ஆசிர்வதித்து மகிழ்ச்சியும் மனநிறைவும் உங்களோடே இருக்க என் பிரார்த்தனைகள்...

சீனியர் கோழி ரெண்டு பேரும் என் ரெண்டு கண்ணு மாதிரி... இன்று போல என்றும் இணைந்திருந்து என்னை வழிநடத்த விரும்புகிறேன்.. என்றும் என் அன்பிலும் பிரார்தனைகளிலும் நீங்கள் இணைந்திருப்பீர்கள்...

ஜோனா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சியும் நிம்மதியும் என்றும் உங்களோடே இருக்க என் பிரார்த்தனைகள் ...

Offline Maran

Re: என் புத்தாண்டு பரிசு!!!
« Reply #6 on: January 10, 2019, 04:56:04 PM »

அழகான கவிதை வாழ்த்துக்கள் தோழி...  :)





ஒவ்வொரு முறையும்
நம்முடன் பயணித்து
இயற்கையெய்தும்போதும்
ஏதோ சேதி சொல்லிச்செல்கின்றன
வருடங்கள்...!!



அருமையான வரிகள்! பாராட்டுக்கள்.  :)