Author Topic: சத்தியமும் ஜீவனுமாய்  (Read 631 times)

Offline Guest 2k

சத்தியமும் ஜீவனுமாய்
« on: December 25, 2018, 09:43:21 AM »
சத்தியமும் ஜீவனுமாய்

சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிற
இயேசு இதோ பிறப்பெடுத்திருக்கிறார்

பேரன்பின் கடலில் நாம்
என்றும் திளைத்திருக்க
சத்தியமும் ஜீவனுமாய்
இயேசு இதோ பிறப்பெடுத்திருக்கிறார்

அன்புக்குரியவர்களை வாதை
என்றும் அணுகாதிருக்க
சத்தியமும் ஜீவனுமாய்
இயேசு இதோ பிறப்பெடுத்திருக்கிறார்

வன்மம் நிறைந்த உலகின்
தீமை அகற்ற
சத்தியமும் ஜீவனுமாய்
இயேசு இதோ பிறப்பெடுத்திருக்கிறார்

நம் பாத்திரத்தில்
புனித மேய்ப்பரின் கருணை
என்றும் நிறைந்திருக்க
சத்தியமும் ஜீவனுமாய்
இயேசு இதோ பிறப்பெடுத்திருக்கிறார்

வானம் நிறைக்கும் நட்சத்திரங்களை
ஆசுவாசமாய் நாம் பார்க்க
சத்தியமும் ஜீவனுமாய்
இயேசு இதோ பிறப்பெடுத்திருக்கிறார்

தள்ளளுரும் மனதை ஸ்திரப்படுத்தி
திடமனதாக்கி இரட்சித்தருள
சத்தியமும் ஜீவனுமாய்
இயேசு இதோ பிறப்பெடுத்திருக்கிறார்

கண்ணிற்கு கண், பல்லிற்கு பல்லென
விரோத பாவங்கள்
நமை அண்டாதிருக்க
சத்தியமும் ஜீவனுமாய்
இயேசு இதோ பிறப்பெடுத்திருக்கிறார்

சக மனிதரின் துரோக தப்பிதங்களை
நாம் மன்னித்து தயவுள்ளவராய்
இருக்க
சத்தியமும் ஜீவனுமாய்
இயேசு இதோ பிறப்பெடுத்திருக்கிறார்

பரலோகராஜ்யத்தின் பிள்ளைகளாய்
தேவனிடத்து விசுவாசம் கொண்டு
நாமிருக்க
சத்தியமும் ஜீவனுமாய்
இயேசு இதோ பிறப்பெடுத்திருக்கிறார்

தேவக்குமாரனின் குறைவில்லாத
கிருபையால் என்றென்றும்
நலமோடு நாம் வாழ
சத்தியமும் ஜீவனுமாய்
இயேசு இதோ பிறப்பெடுத்திருக்கிறார்

நம் பாவங்களை சுமந்து
ஒளியை விழுங்கும் இருள் அகற்ற
சத்தியமும் ஜீவனுமாய்
இயேசு இதோ பிறப்பெடுத்திருக்கிறார்
« Last Edit: December 25, 2018, 11:31:05 AM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்