அவளும் அவனும்
அவள் :
விழி மூடி உனையே சுவாசிக்கிறேன் ...
விழி தாள் மூடினால்
உன் முகம் கண்டின் எப்படியடா
உறக்கம் கொள்வாள் பேதை ...
அவன் :
உன் விழி வீச்சினில்
விழ்த்துகிடக்கும் காளை இவன்...
உன் கரம் கொண்டு மீட்பாயாக கண்ணே !
அவள் :
கரம் பற்றும் உன் ஸ்பரிசத்தில் காதல்
பெருகும் பேதை நெஞ்சினிலே ..
அவன் :
பேதை என்று சொல்லும் பேரழகியே !
செந்தமிழில் சொற்கள் இல்லையே ..
காதலன் நான் உனை கவிவடிக்க!
அவள்:
காதலனே உன் காதல் கண்டு
பேதைமை இல்லை...
கவிவீச்சினில் அச்சம் கொள்ளும்
அஞ்சுகம் இவள்...
அவன்:
இமை மூடினாலும் இதயம் கெஞ்சும்
கன்னி உன் அஞ்சன விழி தேடி ...
அவள்:
எனை தேடும் உன் மனம் அறியாத,
மங்கை இவள் மஞ்சம் கொள்ளும்
பஞ்சணை அதுவென்று ??
அவன்:
பஞ்சணை கொள்ளும் அல்லி அறியாததா?
சொப்பனத்திலும் நீ எனை
தீண்டுவதில்லை பெண்ணே !
அவள்:
இவள் கனவில் வந்தால் நித்தமும்
உன் நித்திரை கண்ணாமூச்சி ஆடும்
தொட்டு விடும் தொலைவில்
நானும் உன் உறக்கமும்....
அவன்:
என் நித்திரை களவாடும் காஞ்சனையே
உன் நெஞ்சம் எனது மஞ்சனையே !
அவள்:
நெஞ்சமத்தில் மஞ்சம் கொள்ளும் மன்னவன்
அறியாத வித்தகம் உண்டோ பாரினில் !