தூரப்பயணம் ஒன்றில்
பேருந்துக்கு முன்னதாகவே வந்து
ஆரத்தழுவிக்கொள்ள காத்து நிற்கிறது உன் பேரன்பு....
குளிருக்கு போர்த்திக்கொள்ள
மடித்து வைத்திருக்கும் உன் கைகளையேனும் கொடு...
பனிபொழியும் தினமொன்றில்
அதிகாலை குளிர்போலே
உயிர் நரம்புகளில்
அன்பால் ஊடுருவிக்கொள்கிறாய்..
இடம் வலம் என
உன் நினைவுகளால்
சூழ்ந்திருக்கும் இந்த இரவில்
தனித்திருக்கிறேன் என்பது பொய்யாகக்கூடும்...
கன்னத்தின் ஈரத்தில்
நிலைக்கொள்கிறது காதல்..
பல நேரங்களில் கண்ணீராய்
சில நேரங்களில் முத்தங்களாய்..
என்னைவிட
என் கவிதைகளுக்கு
உன்னை நன்றாக தெரியும் என்கிறாய்...
தலை கால் புரியாமல் பெருமிதம் கொண்டலைகிறது
என் கவிதை......
இறுதியாய்
உன்னை நினைத்தாலே
உள்ளார உல்லால.....😎