எதுவாக வேண்டுமென்பதை விட
எதுவாக வேண்டாமென்பதாகிறது வாழ்க்கை..
நீ எதுவாகிறாயோ
நான் அதுவாகிறேன் என்பது பொய்யாகி
நீ என்னை எதுவாக கொள்கிறாயா
அதுவாக மாறும் பொய்யாதலே நிஜமாகிறது..
தீவிர சிகிச்சை பிரிவில்
உயிர் நீட்டிக்கும் இயந்திரங்களாய்( Life Support)
நம்பிக்கைகளின் கவசமணிந்து தொடருதல்
நீ இல்லா வேளைகளில்
மூளைச்சாவடைந்தவனின் இருத்தலாகி
இறத்தல் காத்து தொடர்கிறது..
மாற்றுகள் இல்லையெனினும்
மீதமுள்ள முணுமுணுப்புக்கள்
பேசுப்பொருட்களில் கூட உட்படாத
ஒரு உறுத்தல் மட்டுமே
கவசமாய் தரித்தலைந்த நம்பிக்கைகளை
முகமூடியாக்கும் கண்கள் கொண்டு
தீர்ப்பளித்து போகிறது காலம்.
இறுதிச்சடங்கின்
வாசனைத் தைலக்குப்பியை நினைவூட்டும்
ஒரு அழகான கவிதையில்
இலயித்திருக்கிறது