வாழ்க்கை ஓடும் ஓட்டத்தில்..
மனங்களும் ..மணங்களும் .
சிதறி போன ....
நியாபகங்களின் சிதறல்களா?
நெஞ்சின் கனல்களை....
தீ மூடும் சிதைகளா?
ஒத்துப்போன நெஞ்சங்களின் ....
ஒளிக்கற்றை வீசும் பிம்பங்களா?
இல்லை.....
மோதும் எண்ணங்களின் ...
அலைவீச்சில் சரியும் நீர் குமிழ்களா?
சலனங்கள் சாரலில் சார்ந்து..
சங்கமிக்கும் ஆகாயவெளிகளா?
இல்லை....
நிஜங்களின் நிதர்ஷணத்தில் ...
ஊமையாகி போன உணர்வுகளா ??
கானகத்தை அரிக்கும் கரையான்களும்....
காலத்தை கரைக்கும் கணங்களும் ..
மறக்க நினைத்தாலும் .. மறைத்தும் .முடியாத ..
சில நினைவுகளை ....மரிக்க வைக்க ...
சில நட்புகளும் .... புது உறவுகளும் ...
இவை எல்லாம் நீடிக்குமா?
என்று தெரியவில்லை! ...புரியவில்லை !!