தொலைவிலிருந்தும்
அருகில் இருப்பதான தருணங்கள்
தொலைந்து போயிருக்கின்றன.
வெவ்வேறு தடங்களில் நின்றிருந்தாலும்
ஒரே எண்ணத்தில் இணைந்து நிற்கும்
நிலைகள் மறந்து போயிருக்கின்றன.
கால ஓட்டத்தில்
வெவ்வேறு பாதைகளில்
விரைந்தோடி கொண்டிருக்கும்
மனம், ஒரு கணம் நின்று
நாம்
சிரித்து, அழுது,
சண்டையிட்டு, சமாதானமுற்று,
துவண்டு விழும்பொழுது தோளென
தாங்கி நின்று,
உன்னத நிமிடங்களை பகிர்ந்த
கனவென மாறிப் போன காட்சிகளை
மீண்டும் ஒரு முறை
திரும்பி பார்க்க இறைஞ்சுகிறது.
காலம் என்பது முடிவில்லாததுதான்
அது போலவே நட்பும்...
இந்த
பிரிவு என்பது முற்றுப்புள்ளி
இடப்பட்டத்தல்ல
அருகில் சில புள்ளிகளை
மீண்டும் இடுவோம்...
-என்றும் நட்பின் நட்பை நேசிக்கும்
நான்