வா வா வான்மழையே !
பாரியாய் வாரி வாரி வழங்கும்
வஞ்சமில்லா கொஞ்சும் வரி மழையே !
வாட்டி வதைக்கும் கோடை வெயிலையே
வெட்டி வீழ்த்தி வென்றிடும் வகையில்
வெகு குளிரான மாற்று வழி ஒன்றை (உன் வரிகள்)
வசம் வைத்திருக்கும் வெற்றி துணிச்சலில்
வெட்டவெளியில் வெறும் கண்கள் வழியே
வான் பார்த்து ,நான் காத்துகொண்டிருக்கின்றேன்
உன் வரவிற்காக ,வரிகளுக்காக
வா வா வா வான்மழையே !