முன்பு நான்
நாணயத்தை பார்த்ததில்லை.
ஆனால் முன்பே
நீங்கள் நாணயமானவர்கள்.
அன்றொரு நாள்
நாணயத்தை கண்டேன்.
அன்றும்
நீங்கள் நாணயமானவர்கள்.
பிறிதொரு நாள்
நாணயத்தை கையில் எடுத்து
இரு பக்கத்தையும் பார்த்தேன்.
அப்போதும் கூட
நீங்கள் நாணயமானவர்கள்.
உங்கள்
நாணயங்கள் பிடித்துப் போகவே
தேடித் தேடி சேகரித்தேன் நாணயத்தை.
இதோ.. யாசகம் கேட்டவனுக்கு
அந்நாணயங்களை வாரி வழங்கியதும்
முகத்தில் வீசியெறிந்து சொல்கிறான்
இந்நாணயங்கள் செல்லாக்காசென.
எனக்குத் தெரியும்.
இனியும் கூட
நீங்கள் நாணயமானவர்கள்.