Author Topic: அன்பின் நிறைகுடம்  (Read 497 times)

Offline Guest

அன்பின் நிறைகுடம்
« on: November 29, 2018, 02:24:34 PM »
நிறைத்தலின் யாசிப்புக்கள்
நின்றுபோன பொழுதொன்றில்
கீறல்கள் விழுந்துப்போன
ஒரு அன்பின் குடம்
சுமந்தலைகிறேன்.

விரிசல்களில்
உன் குரலின் பசை ஊற்றி
கருணையின் கைவிரல்கள் கொண்டு கீறல்களொட்டி
பின் உன்னிருத்தலால்
அன்பின் நிறைகுடம் செய்கிறாய்..

என் மனமெனும்
கண்ணாடி கிண்ணமுடைக்க வரும் படையழிக்கும்
அனுதாபம் கொள்ளாத பெருஞ்சமர் புரிய
இரு கைகளிலும்
ஆயுதங்கள் தந்தென்னை ஆயத்தமாக்கிச்செல்..
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ