Author Topic: சமுத்திரம் நீ.....  (Read 591 times)

Offline Guest

சமுத்திரம் நீ.....
« on: November 27, 2018, 07:04:23 PM »
ஆழம் கொண்ட கடல் நீ..
எனக்கு தெரிந்ததெல்லாம்
மேலோட்டமான பேரமைதியும்
ஆர்ப்பரிக்கும் சில அலைகளும் மட்டுமே.

முத்துகுளிப்பதாய் மூச்சடக்கி
மூழ்க முயலுகையில்
ஆழம் உணர
இடைவெளிகளில் மிதக்கிறேன்..

ஆழங்களின் பரிணாமத்தை
அனுமானங்களில்
அளவீடு செய்துகொள்கிறேன்.

அச்சமூட்டும் பேரமைதியில்
தத்தளித்து நகருகையில்
இயலாமை உணர்த்தி
துரத்த துவங்குகிறது சுயம்.

நீ வசப்படா சமுத்திரம்
நான் சாமான்யன்.
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline Guest 2k

Re: சமுத்திரம் நீ.....
« Reply #1 on: November 28, 2018, 07:47:47 PM »
நீ வசப்படா சமுத்திரம், நான் சாமான்யன். என்னவோ பண்ணுது நண்பா இந்த வரிகள் <3

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Guest

Re: சமுத்திரம் நீ.....
« Reply #2 on: November 28, 2018, 11:04:50 PM »
Chikku பின்னூட்டங்களால் மனதை வருடுவது உங்களுக்கு மட்டுமே கைவந்த  கலை😂
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline Guest 2k

Re: சமுத்திரம் நீ.....
« Reply #3 on: November 29, 2018, 08:20:51 AM »
நண்பா இது அன்பா சொல்ற மாதிரி தெரியலையே. நக்கலா சொல்ற மாதிரில இருக்கு   :D

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Guest

Re: சமுத்திரம் நீ.....
« Reply #4 on: November 29, 2018, 01:11:39 PM »
சாபங்களே சில நேரங்களில் ஆசீர்வாதமாகுமாம் அன்பினில்... எனில் நக்கலும் ?!😎
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ